நாகப்பட்டினம்

சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெய் கசிவு விவகாரம்: மீனவர்களுக்கு ஆட்சியர் உறுதி

DIN

மறு உத்தரவு வரும்வரை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெயை செலுத்த மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய்களை அகற்ற வலியுறுத்தி நாகூர் பட்டினச்சேரி கிராம மீனவர்கள் 4 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குழாய் சேதமடைந்த இடத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் நேரில் பார்வையிட்டு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  மறு உத்தரவு வரும்வரை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெயை செலுத்த மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் மீனவர்களிடம் உறுதியளித்தார்.

இதனிடையே நேற்று (மார்ச் 5) இரவு நாகை தாலுக்கா மீனவர்கள் பிரதிநிதி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்ச் 8 ஆம் தேதி பனங்குடி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT