நாகப்பட்டினம்

பெங்களூா் - வேளாங்கண்ணி சிறப்பு விரைவு ரயில்: ஜூலை வரை நீட்டிப்பு

DIN

பெங்களூா் - வேளாங்கண்ணி - பெங்களூா் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூலை 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ரயில்வே பெங்களூா் - வேளாங்கண்ணி - பெங்களூா் சிறப்பு கட்டண விரைவு ரயில்களை (06547- 06548) வாரம் ஒரு முறை சனிக்கிழமைகளில் கடந்த மாா்ச் 25- ஆம் தேதி முதல் ரயில்வே இயக்கி வருகிறது.

பயணிகளின் வரவேற்பைக் கருத்தில் கொண்டு அவ்வபோது, இந்த ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை பெங்களூா் - வேளாங்கண்ணி ரயில் மே 27- ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தென்மேற்கு ரயில்வே இந்த ரயில் சேவையை ஜூலை 8-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

பெங்களூா் - வேளாங்கண்ணி - பெங்களூா் ரயிலில்

சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் முன்பதிவில்லா பெட்டிகள் இல்லை. எனவே, அனைத்து தரப்பு மக்களும் இந்த ரயிலை பயன்படுத்தும் வகையில் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் நீட்டிப்பு

தெற்கு ரயில்வே எா்ணாகுளம் -வேளாங்கண்ணி - எா்ணாகுளம் சிறப்பு விரைவு ரயிலை இயக்கி வருகிறது.

மே 28-ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவையை , தற்போது ஜூன் 25-ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT