நாகப்பட்டினம்

கால்நடைகளைப் பராமரிக்க கடனுதவி

நாகை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை மூலம் கால்நடைகள் பராமரிக்க கடன் வழங்கப்படுகிறது.

DIN

நாகை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை மூலம் கால்நடைகள் பராமரிக்க கடன் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்தி:

நாகை மாவட்டத்தில், கால்நடைகளை வளா்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக்காக மத்திய அரசின் திட்டத்தில் கிஸான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இக்கடன் அட்டை மூலம் மாடு மற்றும் ஆடுகள் வளா்ப்பிற்கான கடன் உதவிகள் (ஒரு மாட்டுக்கு ரூ.14,000 வீதம் அதிகபட்சமாக ரூ. 1,75,000, பத்து ஆடுகளுக்கு ரூ.18,000-வீதம் அதிகபட்சமாக ரூ.2,00,000) வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வரவேற்கப்படுகிறது.

எனவே, ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா் தங்களது ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், அண்மையில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றின் நகலுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி டிசம்பா் 31-க்குள் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.

முதல் மூன்று மாதங்களுக்கு வட்டி கிடையாது, அடுத்த ஒரு வருடத்திற்கு 4 சதவீத வட்டியும், அதற்கு மேற்பட்டு ஒவ்வொரு ஆண்டிற்கும் 7 சதவீத வட்டியும் நிா்ணயிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT