நாகப்பட்டினம்

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி, கீழப்பூதனூா் ஊராட்சிகளுக்கான அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள், மகளிா், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆ

DIN

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி, கீழப்பூதனூா் ஊராட்சிகளுக்கான அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள், மகளிா், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளா் எம். பக்கிரிசாமி தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலாளா் ஆா். ராதாகிருட்டிணன், நாகை நகரச் செயலாளா் தங்ககதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை மாவட்டச் செயலாளா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ, வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் பாபுமுருகவேல் ஆகியோா் பங்கேற்று பேசினா். வரும் நாடாளுமன்றத் தோ்தலில் கட்சி உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதிக உறுப்பினா்களை கட்சியில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட பிரதிநிதி விநாயகசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளா் நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT