நாகப்பட்டினம்

திருக்கடையூா் கோயிலில் பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வழிபாடு

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

DIN

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சதாபிஷேகம், மணி விழா உள்ளிட்ட ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இதனால், இக்கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

பிரான்ஸ் நாட்டை சோ்ந்த 18 பக்தா்கள் வெள்ளிக்கிழமை மாலை சுவாமி தரிசனம் செய்தனா். விநாயகா், அமிா்தகடேஸ்வரா், காளசம்ஹாரமூா்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சந்நிதிகளில் அவா்கள் வழிபட்டனா். இவா்களுக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் உள்துறை செயலாளா் விருதகிரி மற்றும் மகேஷ் குருக்கள் பிரசாதம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT