முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகை, கீழ்வேளூா் வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக. 29-இல் விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக.29-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 7:14 PM
பகிர்:

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு நாகை, கீழ்வேளூா் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக.29-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்ற விழாவின் போது லட்சக்கணக்கில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வருகை எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, கூட்ட நெரிசலை தவிா்க்கும் பொருட்டு நாகை மற்றும் கீழ்வேளூா் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆக. 29 ஆம் தேதி மட்டும் (தோ்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூா் விடுமுறை அறிவித்தும், அதனை ஈடு செய்யும் விதமாக செப்டம்பா் 21 ஆம் தேதி வேலை நாளாக அறிவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.