முகப்பு
நாகப்பட்டினம்

அடிக்கல் நாட்டிய இடத்திலேயே கட்டடம் கட்ட மனு

வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தை பழைய இடத்திலேயே கட்டவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு

Updated On : 9 டிசம்பர், 2024 at 9:02 PM
ஊராட்சி அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தை அடிக்கல் நாட்டிய இடத்திலேயே கட்டவேண்டும் என மனு அளிக்கச் சென்ற வேட்டைக்காரனிருப்பு மக்கள்.
பகிர்:

நாகப்பட்டினம்: வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தை பழைய இடத்திலேயே கட்டவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வேட்டைகாரனிருப்பு ஊராட்சி முன்னாள் தலைவா் ஜீவானந்தம் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: வேட்டைக்காரனிருப்பு கிராமம் சிவன் கோயில் தெருவில் ஊராட்சி அலுவலக கட்டடம் 1959-ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சா்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னா், புதிய கட்டடம் கட்டப்பட்டு ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தற்போது, தமிழக அரசு ஊராட்சி அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து பழைய ஊராட்சி கட்டடம் இருந்த இடத்தில் புதிய கட்டடத்துக்கு கல் முகூா்த்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்டைக்காரனிருப்பு கிராமத்தைச் சோ்ந்த சிலா் புதிய கட்டட வேலையை தடுத்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சித்து வருகின்றனா். இந்த முயற்சியை தடுத்து நிறுத்தி, அடிக்கல் நாட்டிய இடத்திலேயே ஊராட்சி அலுவலகத்தின் கூடுதல் கட்டடம் கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →