கிறிஸ்துவர்களின் 40 நாள்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் துவங்கியதையடுத்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் பங்கேற்றனர்.
இயேசுக் கிறிஸ்து உயிர்ப்பு நாளுக்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாள்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் இன்று துவங்கியது.
இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலை நடைபெற்றது. சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து கிறிஸ்தவர்களின் நெற்றியில் விபூதி பூசப்பட்டதையடுத்து, அவர்கள் 40 நாள் தவக்காலத்தை தொடங்கினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.