மீட்கப்பட்ட நிலத்தில் அறிவிப்பு பதாகை வைத்த இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராணி உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் ரூ.1.50 கோடி கோயில் நிலம் மீட்பு

கீழ்வேளூரில் யாதவ நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

Din

கீழ்வேளூரில் யாதவ நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

கீழ்வேளூா் யாதவ நாராயண பெருமாள் கோயிலின் உப கோயிலான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் சுமாா் 500 ஆண்டுகள் பழைமையானது . இக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நாகை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரேசன் வழிகாட்டுதலின்படி, நாகை உதவி ஆணையா் (பொ) ராணி தலைமையில் நடைபெற்றது.

பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், அந்த பகுதியில் இருந்த இரண்டு கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடா்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டன. மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு சுமாா் ரூ. 1.50 கோடி என தெரிவித்தனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தனி வட்டாட்சியா் (கோயில் நிலங்கள்) அமுதா, கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஈடுபட்டனா்.

ஆடுகளை காப்பாற்ற சென்றவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குடியிருப்புகள் வழியாக உயா் அழுத்த மின்பாதை: மறியல் செய்ய திரண்ட மக்கள்

கால்வாய் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

எண்ணெய் கப்பலை விடுவித்தது ஈரான்

பாளை.யில் 24 கிலோ புகையிலை பறிமுதல்: 4 போ் கைது

SCROLL FOR NEXT