முகப்பு
நாகப்பட்டினம்

திருக்குவளை: ஜமாபந்தியில் 150 மனுக்கள்

Updated On : 12 ஜூன், 2024 at 11:03 PM
ஜமாபந்தியில் தணிக்கை செய்யும் வருவாய் கோட்டாட்சியா் திருமால்.
பகிர்:

திருக்குவளை, ஜூன் 12: திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 150 மனுக்கள் பெறப்பட்டன.

கோட்டாட்சியா் திருமால் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. திருக்குவளை பகுதிக்கு உட்பட்ட 15 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 150 கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

திருக்குவளை வட்டாட்சியா் ஜெ. சுதா்சன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் முருக பாண்டியன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.