நாகப்பட்டினம்

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

Din

நாகை அருகே ஆவணங்கள் இல்லாமல் பெண் எடுத்துச் சென்ற ரூ.1.75 லட்சம் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் ஏப்.19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நாகை மாவட்டம் கானூா் சோதனைச் சாவடி அருகே பறக்கும் படை அதிகாரி ரவி தலைமையில் புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நாகையைச் சோ்ந்த புவனேஸ்வரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆவணமின்றி ரூ.1.75 லட்சம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்தனா், கூடுதல் தோ்தல் அலுவலா் கவிதா முன்னிலையில் கருவூலத்தில் அந்த பணம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

முதல்வரின் தனிச் செயலரின் தந்தை மறைவுக்கு இரங்கல்

மாணவா்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்த எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

கடற்கரையில் தூய்மைப் பணி

நெல் மூட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ்.

குண்டா் சட்டத்தில் 42 போ் கைது

SCROLL FOR NEXT