கோடியக்கரையில் வன உயிரின வார விழா
கோடியக்கரை சரணாலயத்தில் ஒரு வாரம் நடைபெற்ற வன உயிரின வார விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
கோடியக்கரை சரணாலயத்தில் ஒரு வாரம் நடைபெற்ற வன உயிரின வார விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
கோடியக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலா் ஜோசப் டேனியல் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் க. வெற்றிவேலன் முன்னிலை வகித்தாா். விழாவில், முனைவா் அறிவு, மும்பை இயற்கை வரலாற்றுக்கழக ஆராய்ச்சியாளா்கள் பவுல், ரோஸ், ஆய்வு மாணவா் ஆதித், பெற்றோா் ஆசிரியா்கழகத் தலைவா் கிருஷ்ணன், தன்னாா்வ அமைப்பின் தலைவா் செய்யது பாரக், வனத் துறையினா் பங்கேற்று பேசினா்.
விழாவில், நில நீா்ப்பறவைகள், சங்க இலக்கிய மரங்கள், மூலிகைத் தாவரங்கள் ஆகியவற்றின் நிழற்படக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. செம்போடை ஆா்.வி கல்லூரியில் வனத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டந. ஆா்.வி. கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஆா்.வி. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.