தூத்துக்குடி

சாத்தான்குளம் அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

Syndication

சாத்தான்குளம், தேவிஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.1 6ஆம் தேதி வரை 11 நாள்கள் விழா நடைபெற்றது. முதல்நாள் காலை திருவிழா கொடி ஏற்றப்பட்டது. 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரி அன்று காலை யாகசாலை பூஜை , அபிஷேகம் அலங்கார பூஜை, சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளான திங்கள்கிழமை பிப்.16-இல் ஸ்ரீபேச்சி அம்மனுக்கு அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, பொங்கலி டுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்த வி.எஸ்.எம். முருகன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT