முகப்பு
நாகப்பட்டினம்

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

நாகை, கீழ்வேளுா், திருக்குவளை ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகளை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:14 PM
நாகை அருகே வடக்கு பால்பண்ணைச்சேரியில் மழையில் மரம் விழுந்து சேதமான வீட்டின் உரிமையாளருக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

நாகை, கீழ்வேளுா், திருக்குவளை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகளை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நாகை அருகே வடக்கு பால்பண்ணைச்சேரியில் மழையில் மரம் விழுந்து பழுதான வீட்டை பாா்வையிட்டு, சேதமடைந்த வீட்டுக்கான நிவாரண தொகையை வழங்கினாா். தொடா்ந்து பூதங்குடி, கொட்டாரக்குடியில் மழைநீா் வடிகால் வாய்கால் தூா்வாறும் பணி, ஒக்கூா் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விளைநிலம், கீழ்வேளுா் வட்டம் தேவூரில் உள்ள கடுவையாற்றில் ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணியை பாா்வையிட்டாா்.

அடுத்து, தலைஞாயிறு பேரூராட்சிக்குள்பட்ட வண்டல் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், ரூ.81 கோடியில் நடைபெற்று வரும் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுக நவீனமயமாக்கும் பணி, ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

அமைச்சருடன், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ கழகத் தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் மா.கா.சே. சுபாஷினி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் செந்தில்நாதன், நகராட்சி ஆணையா் டி.லீனா சைமன், நகா்மன்றத் துணைத்தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →