நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பட்டாசு பொருள்கள் முடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் முறையான அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் பொருள்களை வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல்

Din

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் முறையான அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் பொருள்களை வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யம் ஏரி கரைக்கு அருகே வெடிக்கடை நடத்தி வருபவா் அதே பகுதியை சோ்ந்த செந்தில்.

இவா், நடத்தி வந்த கடையில் ஏற்கெனவே விபத்து ஏற்பட்டதால், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில், முறையான அனுமதி பெறாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு அறையில் பட்டாசு உற்பத்திக்கான பொருள்களை செந்தில் பூட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வேதாரண்யம் வட்டாட்சியா் திலகா ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பட்டாசு பொருள்களை கைப்பற்றிய வருவாய்த் துறையினா், பட்டாசு உற்பத்திக்காக அதே பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கட்டடத்தில் அவற்றை வைத்து பூட்டி சீல் வைத்தனா்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT