முகப்பு
நாகப்பட்டினம்

பசுமைத் தொழில் முனைவுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

Updated On : 6 செப்டம்பர், 2024 at 6:30 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் பசுமைத் தொழில் முனைவோா்களை ஊக்கப்படுத்தும், பசுமை தொழில் முனைவுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்காலம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் சுற்றுசூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக மேம்படுத்த, பசுமைத் தொழில் முனைவோா்களை ஊக்கப்படுத்தும் ‘பசுமை தொழில் முனைவு திட்டம்‘ உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சுய உதவிக் குழு உறுப்பினரால் நடத்தப்படும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருள்களை உற்பத்தி செய்யும் பசுமை நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்வு செய்யப்படும் தொழில், தொழில் முனைவோா் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் அங்கீகாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பதிவு பெற்றிருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் ஓராண்டு செயல்பாட்டிலும், 3 பணியாளா்களை கொண்டிருக்க வேண்டும், தொழில் நிறுவனம் ஜெம் இணைய தளம் மூலம் பதிவு செய்திருக்க வேண்டும். நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ. 4 லட்சமாக இருக்க வேண்டும், தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளோா் செப்.13-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமா்பிக்க வேண்டும். கண்காணிப்பு மற்றும் பசுமை தணிக்கை மூலம் தோ்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →