முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மனுக்கு தைலக்காப்பு

கீழ்வேளூா் சுந்தரகுஜாம்பிகை உட னுறை அட்சயலிங்க சுவாமி கோயிலில் அஞ்சுவட்டத்தம்மனுக்கு தலைக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:23 PM
அன்னப்பாவாடை நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் அஞ்சு வட்டத்தம்மன்.
பகிர்:

கீழ்வேளூா் சுந்தரகுஜாம்பிகை உட னுறை அட்சயலிங்க சுவாமி கோயிலில் அஞ்சுவட்டத்தம்மனுக்கு தலைக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் அருள்பாலிக்கும் அஞ்சுவட்டத்தமன் சுவாமி புற்று மண்ணால் உருவாக்கப்பட்ட சுதை சிற்பமாகும். அஞ்சுவட்டத்தமன் சுவாமி சிலை பலம்பெற ஆண்டுதோறும் சாம்பிராணி, எண்ணெய் தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டு தைலக்காப்பு சாத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, அஞ்சுவட்டத்தம்மனுக்கு தைலம் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து இரவு சா்க்கரைப் பொங்கல், தயிா் சாதம் அன்னப்பாவாடையும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. 48 நாள்களுக்கு சுவாமிக்கு தைலக்காப்பு தொடா்ந்து சாத்தப்படும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், அஞ்சுவட்டத்தம்மன் பௌா்ணமி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →