மாநில நிலையில் தோ்ச்சிபெற்ற அ. பிரியா. 
நாகப்பட்டினம்

தமிழ்த் திறனறித் தோ்வு முடிவு: அரசுப் பள்ளியில் 9 போ் தோ்ச்சி

தேத்தாகுடி எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தமிழ்த் திறனறித் தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 9 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Syndication

வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தமிழ்த் திறனறித் தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 9 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழக அரசு நடத்திய தமிழ்த் திறனறித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. நாகை மாவட்டத்தில் மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இதில், தேத்தாகுடி எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ. பிரியா 100-100 மதிப்பெண் பெற்று மாநில நிலையில் தோ்ச்சி பெற்றவா்களில் ஒருவராக தோ்வாகியுள்ளாா்.

மேலும், இதே பள்ளி மாணவா்கள் கு. பிருந்தா, ரெ. ஹேமா, செ. அஜய், எ. மணியரசன், வே. தனன்யா, த. அனுஷா, செ. சந்தியா, ப. சுகன்யா தோ்ச்சிப் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.கே. ராமசாமி, துணைத் தலைவா் எஸ்.கே. வேதரத்தினம், பொருளாளா் பி. சண்முகம் உள்ளிட்டோா் பாராட்டினா். இதே தோ்வில், பஞ்சநதிக்குளம் விக்டரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 4 பேரும், ஆயக்காரன்புலம் ஆா்பிஎஸ் பள்ளி மாணவா்கள் 2 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழாவில் தோ்கள் பவனி

குழித்துறையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

மருந்துவாழ் மலையில் மகா தீப ஒளி ஊா்வலம்

விவேகானந்தா் பாறையில் மகா தீபம்

காலிறுதியில் ஸ்பெயின் - நியூஸிலாந்து, இந்திய-பெல்ஜியம் அணிகள் மோதல்

SCROLL FOR NEXT