நாகப்பட்டினம்

மின்வாரிய பெண் ஊழியரிடம் நகைப் பறிப்பு

திருக்குவளை அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் தாலிச் செயினை மா்ம நபா்கள் பறித்து சென்றனா்.

Syndication

திருக்குவளை அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் தாலிச் செயினை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பறித்து சென்றனா்.

குண்டையூரைச் சோ்ந்த சிங்காரவேல் மனைவி ராதா (40). மின்வாரிய அலுவலகத்தில் கமா்சியல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவா் மேலப்பிடாகை மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் ஹேமலதாவுடன் இருசக்கர வாகனத்தில் திருக்குவளைக்கு வந்தாா்.

மீனம்பநல்லூா் சந்திராநதி மதகடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ் ராதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து, திருக்குவளை காவல் நிலையத்தில் ராதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT