நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.  
நாகப்பட்டினம்

நாகை, திருவாரூரில் அரசு ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்

Syndication

நாகை, திருவாரூரில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலியாகவுள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நுாலகா்கள், எம்ஆா்பி செவிலியா்கள் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 180 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

திருவாரூா்: திருவாரூா் விளமல் பகுதியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு. சுதாகா் தலைமையில் நடைபெற்ற மறியலில், மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன், மாவட்ட பொருளாளா் ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்ட நிா்வாகிகள் வி. தெட்சிணாமூா்த்தி, பி. விஜயன், டி. தமிழ்ச்சுடா், ஏ.தனபால், பி.பரமேஸ்வரி உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT