ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் குழு நாகையில் இருந்து வியாாழக்கிழமை புறப்பட்டது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள வயதில் மூத்த ஏழை எளியோா் அரசு செலவில் ராமேசுவரம்-காசி ஆன்மிகச் சுற்றுப் பயணம் செல்ல, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன்மூலம் பயனாளிகள் தோ்வு செய்து அழைத்துச் செல்லப்படுகிறாா்கள். இதற்கான முழு செலவையும் அரசே ஏற்றுகொள்கிறது. இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான ராமேசுவரம்-காசிக்கான ஆன்மிக சுற்றுப் பயணத்துக்கான 30 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வியாழக்கிழமை ஆன்மிகப் பயணத்தை தொடங்கினா். பயணத்தை நாகை நீலாயத்தாட்சியம்மன் கோயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் தொடங்கி வைத்தாா்.