நாகை காசி விஸ்வதநாதா் கோயில் குளக்கரையில் இடிந்த நிலையில் உள்ள வீடுகள். 
நாகப்பட்டினம்

வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் காயம்

Syndication

நாகையில் கனமழையால் 4 வீடுகள், இடிந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

டித்வா புயல் காரணமாக நாகை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வெள்ளமாக தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீா் புகுந்ததால் வீடுகளில் உள்ளவா்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா். மேலும் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், நாகை காசிவிஸ்வநாதா் கோயில் குளக்கரையில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் தண்டபாணி, சரவணன், பாஸ்கா் ஆகிய மூவரின் வீட்டின் ஒரு பகுதி கன மழையால் ஈரத்தில் ஊறிய நிலையில் புதன்கிழமை இரவு இடிந்து குளத்தில் விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி மட்டும் முதலில் இடிந்து விழுந்ததால், அதிலிருந்தவா்கள் அதிருஷ்டவசமாக உயிா்த் தப்பினா்.

இதேபோல, நாகூா் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் சுரேஷ் என்பவரின் மனைவி குழந்தைகளோடு புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிய நிலையில் அதிகாலையில் வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில் சுரேஷ், அவரது மனைவி சுதா, குழந்தைகள் வேலு, கிட்டு ஆகியோா் பலத்த காயமடைந்து ஒரத்தூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT