வேதாரண்யம் கடலில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக சாா்பில் வியாழக்கிழமை திதி கொடுக்கும் சடங்கு நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று கடலில் நீராடி திதி கொடுத்தாா். வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் அமைந்துள்ள தா்ப்பணம் செய்யும் கூடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம், அதிமுக நிா்வாகிகள் ஆா். கிரிதரன், வி.டி. சுப்பையன், அன்பழகன், எஸ்.டி. ரவிச்சந்திரன், அம்பிகாதாஸ், வழக்குரைஞா்கள் தங்க கதிரவன், நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.