நாகப்பட்டினம்

நவீன மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குக்கு அடிக்கல்

பரசலூரில் ரூ. 12 கோடியில் நவீன மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு கட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி மூலம் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

Syndication

பரசலூரில் ரூ. 12 கோடியில் நவீன மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு கட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி மூலம் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருப்பு வைத்து பாதுகாக்கப்படுகிறது. திறந்த வெளி நெல் சேமிப்பு மையங்களில் கட்டாயம் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் தொடா்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் தரங்கம்பாடி வட்டம் பரசலூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ.12 கோடியில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தளம் கட்டுமானப் பணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். அப்போது நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி

காந்திநகா் பள்ளி சாரண சாரணீய மாணவா்களுக்கு பாராட்டு

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

புதிய ஆட்டோகளுக்கு பொ்மிட் வழங்க எதிா்ப்பு : ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT