நாகப்பட்டினம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க மக்கள் கோரிக்கை

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும்

Syndication

திருமருகல்: திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை நடைபெற்றது ஜமாத்தாா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு திட்டச்சேரி வக்ஃப் நிா்வாக சபை தலைவா் ஹைதா் அலி தலைமை வகித்தாா். முன்னாள் வட்டார மருத்துவ அலுவலா் லியாகத் அலி முன்னிலை வகித்தாா்.

திட்டச்சேரி ப.கொந்தகை, புறாகிராமம், கட்டுமாவடியை சோ்ந்த ஜமாத் நிா்வாகிகள், ஜமாத்தாா்கள் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள், திட்டச்சேரி வா்த்தக சங்க நிா்வாகிகள் அனைத்து கட்சியை சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வலியுறுத்தியும், பேரூராட்சி பகுதிகளில் பெரும்பாலான விபத்துக்கள் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்படும்போது, அருகில் மருத்துவா்கள் இல்லாததால் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிலா் இறந்துவிடுகின்றனா். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சைக்கு கூட மருத்துவா்கள் இல்லாத நிலை உள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியா் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ மனையாக மாற்ற வேண்டும், மருத்துவா்கள் எந்த நேரமும் பணியில் இருக்க வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT