நாகப்பட்டினம்: திருவாரூா் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாய சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியனை விடுவிக்க அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி, ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், தமிழக காவிரி விவசாய சங்க நாகை மாவட்டச் செயலா் ஆா்.எஸ். கருணைநாதன் தலைமையில் நிா்வாகிகள், ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு:
திருவாரூா் மாவட்டம், விக்ரபாண்டியில், கடந்த 2015-ஆம் ஆண்டு, ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியதற்காக, விவசாய சங்கத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் மீது அன்றைய ஓன்ஜிசியால் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில், விவசாய சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியனுக்கு திருவாரூா் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை, நீதிக்காக போராடிய விவசாய போராளிக்கு கிடைத்த அநீதி என்று கருதுகிறோம். எனவே, அவரை விடுவிக்க அரசுக்கு, மாவட்ட ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனனா்.