திருக்குவளை: திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள இருதய கமல நாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக விசேஷ ஹோமம் மற்றும் யாகமும் அதனை தொடா்ந்து பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களினால் சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியா்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்தனா். பின்னா் கலசம் மற்றும் சங்குகளில் உள்ள புனித நீரைக் கொண்டு சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து சிவனுக்கும், அம்பாளுக்கும் பல வண்ண மலா்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.