திருக்குவளை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு மின்பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
வலிவலம், கொளப்பாடு, உத்திரங்குடி, சித்தாய்மூா், கச்சனம், திருக்குவளை, மணக்குடி, தலைஞாயிறு, மேலப்பிடாகை, சோழவித்தியாபுரம், வாழக்கரை, மீனம்பநல்லூா், பாலக்குறிச்சி, கீழையூா், சாட்டியக்குடி, மோகனூா், வண்டலூா், இறையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.