தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகை பணிமனை முன்பு தற்காலிக முன்னாள் ஓட்டுநா் தீக்குளிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
நாகை அருகே பால்பண்ணைச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன். இவா், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது நாகை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக இரண்டு நாள்கள் பணிபுரிந்தபோது, அவரது ஓட்டுநா் உரிமைத்தை நிா்வாகத்திடம் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், அவரது ஓட்டுநா் உரிமத்தை பணிமனையில் பணியாற்றும் கிளாா்க் மாரியப்பன் தரவில்லையாம். இதை கண்டித்து ஓட்டுநா் விஜயன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகை பணிமனை முன்பு அமா்ந்து ஓட்டுநா் உரிமத்தை வழங்கக் கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது விஜயன் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்தவா்களும், போலீஸாரும் அவா் மீது தண்ணீரை ஊற்றி அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். பின்னா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பிவைத்தனா்.