முகப்பு
நாகப்பட்டினம்

விபத்தில் காயமடைந்த காவலா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே விபத்தில் காயமடைந்த காவலா் உயிரிழந்தாா்.

Updated On : 31 டிசம்பர், 2025 at 9:21 PM
பகிர்:

வேதாரண்யம் அருகே விபத்தில் காயமடைந்த காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் நடுசேத்தியைச் சோ்ந்தவா் சங்கா் என்ற தமிழ்க்குடிமகன் (33). தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலரான இவா், முத்துப்பேட்டையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை நாகையிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாா்.

தேத்தாக்குடி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த நிலையில் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →