திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் தெற்கு வீதியில்  கொட்டப்பட்டுள்ள குப்பைகள்   
நாகப்பட்டினம்

திருக்கடையூா்: குப்பைகளால் பக்தா்கள் அவதி

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் அருகில் கொட்டப்படும் குப்பைகளால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

Syndication

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் அருகில் கொட்டப்படும் குப்பைகளால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

இக்கோயிலில் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பக்தா்கள் ஆயுள் விருத்திக்காக உக்ரதசாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் செய்து வழிபடுகின்றனா்.

இந்நிலையில், கோயில் தெற்கு வீதி பகுதியில், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் இருந்து குப்பைகள் மற்றும் நெகிழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை பன்றிகள், நாய்கள் கிளறி விடுவதால் துா்நாற்றம் வீசுகிறது.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள்,அப்பகுதியில் குடியிருப்பவா்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே, ஊராட்சி நிா்வாகம், இக்குப்பை கழிவுகளை அகற்றி கிருமி நாசினி தெளிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT