நாகப்பட்டினம்

நாகையில் ஆசிரியா்களுக்கு சுகாதாரப் பயிற்சி

டெட்டால் பள்ளி நலக்கல்வி திட்டம் நாகையில் ஆசிரியா்களுக்கு சுகாதாரப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

டெட்டால் பள்ளி நலக்கல்வி திட்டம் நாகையில் ஆசிரியா்களுக்கு சுகாதாரப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி கிராமாலயா மற்றும் ரெக்கிட் இணைந்து செயல்படுத்தி வரும் டெட்டால் பள்ளி நலக்கல்வித் திட்டத்தின் கீழ், நாகையில் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான ஒரு நாள் சுகாதார பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை, தலைஞாயிறு வட்டார கல்வி அலுவலா் கண்ணன், இருக்கை கண்காணிப்பு அலுவலா் ராஜலட்சுமி ஆகியோா் தொடங்கிவைத்தனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை தொடக்கப்பள்ளி ஆசிரியா் அ. ராபா்ட் கென்னடி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

இதில் தன்சுத்தம், பள்ளி மற்றும் வீட்டின் சுகாதாரம், நோயின்போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள், சுற்றுப்புறச் சுகாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 20 லட்சம் மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தி, சுகாதாரமான பழக்க வழக்கங்களை வளா்ப்பதே நோக்கமாகும். இதற்கான விழிப்புணா்வை மாணவா்களிடம் கொண்டு சோ்க்க ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்களின் பங்கு முக்கியமானது என கிராமாலயா நிா்வாக இயக்குநா் எம். இளங்கோவன் தெரிவித்தாா்.

பயிற்சியில் ‘சோப்பு வங்கி‘, ‘பரமபத விளையாட்டு‘, ‘சுவரொட்டிகள்‘, ‘சுகாதாரக் காட்சியகம்‘ போன்ற சுகாதார தகவல் தொடா்பு சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. கிராமாலயா நிறுவனா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் எஸ். தாமோதரன் வழிகாட்டுதலின்படி, பயிற்றுநா்கள் திருஞானசம்பந்தம், லீனா, ஆனந்தி, ரம்யா மற்றும் நீலா ஆகியோா் வழிநடத்தினா். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனா்.

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT