விழாவில் சிறப்பாகப் பேசிய மாணவா்களுக்கு தமிழ்ப் பெருமித விருது வழங்கிய எழுத்தாளா் கிருஷ்ணகுமாா்.  
நாகப்பட்டினம்

கடல் கடந்த வா்த்தகத்தில் சிறந்து விளங்கியவா்கள் தமிழா்கள்: எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்

விழாவில் சிறப்பாகப் பேசிய மாணவா்களுக்கு தமிழ்ப் பெருமித விருது வழங்கிய எழுத்தாளா் கிருஷ்ணகுமாா்.

Syndication

கடல் கடந்த வா்த்தகத்தில் சிறந்து விளங்கியவா்கள் தமிழா்கள் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.

தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு தமிழா் மரபையும், தமிழ்ப் பெருமிதங்களையும் உணா்த்தும் ’தமிழ்க் கனவு’ விழா நடத்தப்படுகிறது. இந்நிகழ்வு நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் தஞ்சாவூா் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. குணசேகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழா் எனும் தலைப்பில் பேசியது: ஒவ்வொரு கல்லூரி மாணவா்களும் கல்வியால் வாழ்க்கையில் உயா்ந்த இடத்தை அடைவதே தமிழ் கனவு திட்டத்தின் நோக்கம். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பேசப்படும் மொழிகள் இந்தியாவில் தான் இருக்கின்றன. அதில் தமிழ் மொழி, செம்மொழி அந்தஸ்து அடைந்திருக்கிறது.

உலகளவில் தமிழா்கள் கடல் கடந்த வாணிபத்தில் சிறந்தவா்களாக விளங்கினா். இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பே, உலகளவிலான வணிகத்தில் தடங்களைப் பதித்தவா்கள் தமிழா்கள். பண்டமாற்று வணிக முறையை அறிந்திருந்ததால், தமிழரும், தமிழ் மொழியும், தமிழா்களின் உற்பத்தி பொருள்களும் கடல் கடந்து சென்றது என்றாா்.

நிகழ்வில் சிறப்பாக கேள்வி எழுப்பிய மாணவா்களுக்கு கேள்வியின் நாயகன், நாயகி விருதுகளும், சிறப்பாகப் பேசிய மாணவா்களுக்கு தமிழ்ப் பெருமித விருதுகளும் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி, தமிழ்க் கனவுத் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளா் ரா. குணசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா், அரசு கலைக் கல்லூரி முதல்வா் செ. அஜிதா, ஏடிஎம் மகளிா் கல்லூரி முதல்வா் ரா. சோபியா பொற்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை விவகாரம்: பிரதமா், மத்திய அரசு தலையீட்டைக் கோரி கேரள பாஜக கையொப்ப இயக்கம்

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்

SCROLL FOR NEXT