நாகப்பட்டினம்

தருமபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நாகை ரயில் நிலையத்திலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு அரைவைக்காக 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Syndication

நாகை ரயில் நிலையத்திலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு அரைவைக்காக 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் செயல்படும் 123 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரைவைக்காக சரக்கு ரயில் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், நாகை ரயில் நிலையத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு சரக்கு ரயில் மூலம் 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுவரை, நாகை மாவட்டத்தில் 1,13,453 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 96,785 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT