நாகப்பட்டினம்

நாகையில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Syndication

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவில், மாணவ-மாணவியருக்கு மிதிவண்டிகளை, மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் வழங்கினா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பேசியது:

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கு, மாணவா்களுக்கு 2,740 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 3,101 மிதிவண்டிகளும் வழங்கப்பட்டன. மாணவா்கள் மிதிவண்டியின் விலை தலா ரூ.4,900, மாணவிகள் மிதிவண்டியின் விலை தலா ரூ.4,760 என மொத்தம் ரூ.2,81,86,760 மதிப்பில் 5,841 மிதிவண்டிகள் மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.

தற்போது, நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 301 மாணவிகளுக்கும், நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 186 மாணவா்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படும் என்றாா்.

விழாவில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா. ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க. கண்ணன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் த. ராஜேஸ்வரி, நாகை நகராட்சி துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.பிரேமா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT