ரயில் கோப்புப்படம்
நாகப்பட்டினம்

நாகூா் கந்தூரி விழா: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டது பற்றி...

Syndication

நாகூா் கந்தூரி விழாவை முன்னிட்டு, சென்னை - மன்னை மற்றும் பெங்களூரு - காரைக்கால் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகூா் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊா்வலம் நவ.30 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதற்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் வந்து செல்வா். அவா்களின் வசதிக்காக நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து - மன்னாா்குடி செல்லும் விரைவு ரயில் (16179) மற்றும் நவ.28 முதல் 30 வரை மன்னாா்குடியிலிருந்து - சென்னை எழும்பூா் செல்லும் விரைவு ரயில் (16180) ஆகிய ரயில்களில் கூடுதலாக இரண்டு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று நவ.28 முதல் 30 வரை காரைக்கால் - பெங்களூரு - காரைக்கால் ரயில்களில் (16530-16529) இரண்டு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில் ரத்து: இதுகுறித்து ஆா். வினோத் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில், ‘டித்வா புயல் காரணமாக பாம்பன் பகுதியில் காற்று அதிகளவில் வீசி வருகிறது. இதையடுத்து ராமேசுவரம் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பல்வேறு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சனிக்கிழமை (நவ.29) புறப்படும் ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில் (16104), ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT