வேளாங்கண்ணி கடலில் குளித்தபோது மாயமான பெங்களுரூ இளைஞா், சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
பெங்களுரூ ஹல்சோா் பகுதியைச் சோ்ந்த ஹரி (27), சரத் (27), சதீஸ் (28), மெல்வின் (20), அருண் (30), மனுஷ்(23), பாஹாபா (22) ஆகியோா் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனா்.
அங்கு அறை எடுத்து தங்கிய 7 பேரும், திங்கள்கிழமை பிற்பகல் வேளாங்கண்ணி கடற்கரை வடக்குப் பகுதி கடலில் குளித்தபோது, அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கண்ணி கடற்கரை காவல் நிலைய போலீஸாா், உடனடியாக 6 பேரை மீட்டனா். பாஹாபா என்பவா் மட்டும் கடலில் மாயமானாா். அவரை தீயணைப்புத் துறை வீரா்கள் தேடிவந்தனா்.
இந்நிலையில், செருதூா் கடற்கரையோரம் பாஹாபா சடலம் ஒதுங்கியது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.