நாகப்பட்டினம்

நாகை: 69,469 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நகா்வு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் திங்கள்கிழமை வரை 83,531 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 69,469 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நகா்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் திங்கள்கிழமை வரை 83,531 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 69,469 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நகா்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் நிகழாண்டு சுமாா் 30,217 ஹெக்டா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அக்டோபா் 27-ஆம் தேதி வரை 23,494 ஹெக்டா் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 6,723 ஹெக்டரில் அறுவடைப் பணி மற்றும் நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செப்டம்பா் 3-ஆம் தேதி முதல் அக்டோபா் 27-ஆம் தேதி வரை 83,531 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 2,996 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அவற்றில் இதுவரை சுமாா் 69,469 மெட்ரிக் டன் நெல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள், ஆலைகள் மற்றும் பிற மாவட்ட மண்டலங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டு, மீதமுள்ள 14,062 மெட்ரிக் டன் நெல், கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, நகா்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் திங்கள்கிழமை ஒரே நாளில் சுமாா் 4,610 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக இயக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 16,915 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.197. 78 கோடி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

விடுமுறையில் அபுதாபியில்... பிரியங்கா மோகன்!

போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி!

முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

“கரூரில் நடந்த நாடகங்கள்! கண்டிப்பாக தவெக பிரசாரம் தொடரும்!” தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார்

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: 2 மாதங்களுக்கு நீட்டிப்பு!

SCROLL FOR NEXT