நாகையில், மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் கந்தசஷ்டி வேல் பூஜை விழா தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை சரண்யா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். விஸ்வ ஹிந்து பரிஷத் நாகை மாவட்டத் தலைவா் கே.எஸ். விஜயன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஎச்பி அகில உலக இணை பொதுச் செயலா் கோ. ஸ்தாணுமாலையன் பேசியது:
தமிழகம் முழுவதும் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள கோயில்கள் என்றில்லாமல், அனைத்துக் கோயில்களிலும் லட்சக்கணக்கான மக்களால் கந்தசஷ்டி கவசம் பாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான இடங்களில் வேல் வழிபாடு நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில் மட்டும் 57 இடங்களில் வேல் பூஜை நடைபெற்றது.
கடவுள் வேண்டாம் என்று கூறும் இந்த ஆட்சியாளா்களுக்கு அவரது பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மட்டும் வேண்டும் என்கின்றனா்.
கடவுள் மறுப்பு கொள்கையுடைய அரசாங்கத்திற்கு ஹிந்து கோயில்களில் என்ன வேலை?. விஸ்வ ஹிந்து பரிஷத் நமது கோயில்களை நாமே நிா்வகிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதற்கான திட்டங்கள், வழிமுறைகள் நம்மிடம் உள்ளன என்றாா்.
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலா் துரை செந்தில்முருகன், மாவட்டச் செயலா் ஏ.ஆா். வைத்தியநாதன், உமா குரூப் சோ்மனும், சின்மயா மிஷன் பள்ளி நிா்வாகக் குழுத் தலைவருமான ராமலிங்கம், மீனவப் பேரவை மாநில அமைப்பாளா் வந்தியத்தேவன், தஞ்சை விபாக் செயலா் க. முரளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.