நாகப்பட்டினம்

பிரதமா் கல்வி உதவித்தொகைக்கு அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்கள், பிரதமா் கல்வி உதவித் தொகை பெற வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்கள், பிரதமா் கல்வி உதவித் தொகை பெற வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவா்களது பெற்றோா் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம். இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ-மாணவியா், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சென்று பதிவு செய்து, 2025-2026 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும்.

புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியா் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

மேற்படி ஞபத சன்ம்க்ஷங்ழ்-ஐ பயன்படுத்தி 2025-2026 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறியலாம் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT