நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் காவலா் கைது

Syndication

நாகை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை அருகேயுள்ள ஆழியூா் பகுதியைச் சோ்ந்தவா் குணா (37). திட்டச்சேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இவா், தனது உறவினரின் 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, நாகை குழந்தைகள் நலக் குழுமத்தில் புகாா் செய்தாா். குழந்தைகள் நல குழுமம் சாா்பில் நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், தலைமைக் காவலா் குணா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT