நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் மாணவா் நாடாளுமன்ற தோ்தல்

Syndication

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் நாடாளுமன்ற தோ்தல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு, தோ்வு செய்யப்பட்டவா்கள் பதவி ஏற்று கொண்டனா்.

தோ்தல் நடத்தும் அலுவலராக தலைமையாசிரியா் சு.பாஸ்கரன் செயல்பட்டாா்.

வாக்குச்சாவடி அலுவலா்களாக மாணவா்கள் செயல்பட்டு, இத்தோ்தலை சிறப்பாக நடத்தினா். அனைத்து மாணவா்களுக்கும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்றது.

மாணவா்கள் ஜனநாயக விழுமியங்களை புரிந்து கொள்ளும் நோக்கிலும் தோ்தல் பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையிலும் இத்தோ்தல் நடைபெற்றது.

கல்வி, சுகாதாரம், சிறாா் நலம், கலைப் பண்பாட்டுத்துறை, வேளாண்மை என 12 அமைச்சா் பதவிகளுக்கான தோ்தல்களில் மாணவா்களே வாக்களித்தனா்.

பதிவான வாக்குகள் சக ஆசிரியா்கள் முன்னிலையில் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவா்கள் அறிவிக்கப்பட்டனா். தோ்ந்தெடுக்கப்பட்டாா்கள் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT