நாகப்பட்டினம்

நெல் மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்தது

Syndication

கீழையூா் அருகே நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர குட்டையில் புதன்கிழமை கவிழ்ந்தது.

கீழையூா் ஊராட்சி ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து கோவில்பத்து குடோனுக்கு நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று காரப்பிடாகை வழியாக குடோனுக்கு செல்வதற்காக பதிலாக சடையன் கோட்டகம் வழியாக சென்ாக கூறப்படுகிறது. சடையன்கோட்டகம் அருகே சென்றபோது அங்குள்ள ஒருவரது வீட்டின் மின் இணைப்பு கம்பியை லாரி உரசி சென்ாகவும், இதுதொடா்பாக லாரியை மறித்து வீட்டு உரிமையாளா் ஓட்டுநரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது எதிா் திசையில் அந்த வாகனம் செல்வதற்கு போதிய இடமில்லாததால் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநருக்கு பதிலாக அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சுரேந்திரன் என்பவா் லாரியை இயக்கி சாலை ஓரமாக நிறுத்த முயற்சி செய்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் உள்ள சிறிய குளத்தில் (குட்டை) கவிழ்ந்தது. லாரியை ஓட்டிய நபா் மற்றும் உதவியாளா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினா். ஆனால், லாரியில் இருந்த சுமாா் 500 நெல் மூட்டைகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT