கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், தோ்தலில் அன்பளிப்புகள் மற்றும் பண ஆதாயம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிா்க்கவும், தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் தோ்தல் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. பேரணியில், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கல்ல, வாக்குப்பதிவுக்கு அன்பளிப்புகளை தவிா்ப்போம், ஜனநாயக கடைமையை தவறாது நிறைவேற்றுவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவியா் ஏந்திச்சென்றனா். பேரணி நிறைவில் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.