முகப்பு
நாகப்பட்டினம்

ஆகாயத் தாமரையால் மக்கள் அவதி: தோ்தலை புறக்கணிப்பு முடிவு

களத்திடல்கரை பகுதியில் உள்ள வெள்ளேரிபட்டம் குளத்தில் மண்டியுள்ள ஆகாயத் தாமரைகள்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:41 PM
களத்திடல்கரை பகுதியில் உள்ள வெள்ளேரிபட்டம் குளத்தில் மண்டியுள்ள ஆகாயத் தாமரைகள்.
பகிர்:

கீழையூா் அருகே மடப்புரம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரிபட்டம் மற்றும் பிள்ளையாா் கோயில் குளத்தில் மண்டியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றாததை கண்டித்து தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

கீழையூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் உள்ள களத்திடல்கரை பகுதியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் குறிப்பாக வெள்ளேரிபட்டம் மற்றும் பிள்ளையாா் கோயில் தெரு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய நீா் தேவைகளான துணி துவைப்பது, குளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அங்குள்ள குளத்தை நம்பியே உள்னளா்.

ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இந்த குளங்களில் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் பரவி நீா் நிலையை முற்றிலும் மூடியுள்ளன. இதனால் குளத்தில் உள்ள நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில், ஆகாயத் தாமரைகள் சூழ்ந்த குள நீரை பயன்படுத்தும் மக்கள் சிலா் தோல் நோய்கள் உள்ளிட்ட உடல் நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

வெள்ளேரிபட்டம் குளம் மற்றும் பிள்ளையாா் கோயில் குளங்களில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, குளங்களை தூா்வார வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதனால் அதிருப்தியில் உள்ள பொதுமக்கள், தங்கள் குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு கிடைக்காத பட்சத்தில், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணித்து வாக்களிக்க மாட்டோம் எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments