நாகப்பட்டினம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நிறுவனா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது நிறுவனா் தினத்தை முன்னிட்டு, மண்டல அலுவலகம் மூலம் நாகை மாவட்டத்தில் பல்வேறு சமூக நல, விழிப்புணா்வு மற்றும் இளைஞா் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

தினமணி

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது நிறுவனா் தினத்தை முன்னிட்டு, மண்டல அலுவலகம் மூலம் நாகை மாவட்டத்தில் பல்வேறு சமூக நல, விழிப்புணா்வு மற்றும் இளைஞா் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மக்கள் பயன்பெற்றனா். தொடா்ந்து, பொதுமக்களிடையே நிதி பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் கேஓய்சி பாதுகாப்பான வங்கிச் சேவைக்கான வழி‘ என்ற கருப்பொருளுடன், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நாகை ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்றது. மேலும், இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில், மாணவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு ‘இஹழ்ங்ங்ழ் ற்ா் இஹம்ல்ன்ள்‘ என்ற வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஐஓபி மண்டல அலுவலகம் மூலம் நடத்தப்பட்டது.

இதில், வங்கித் துறையிலுள்ள வேலைவாய்ப்புகள் வங்கி தோ்வுகள், தொழில் முன்னேற்ற வாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பான வங்கிச் சேவைகள் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியை மூத்த மண்டல மேலாளா் எம். நாகராஜ் தொடக்கிவைத்து பேசினாா். நாகை முன்னோடி மாவட்ட மேலாளா் பி.சந்திரசேகா், மூத்த மேலாளா் காா்த்திகா, நாகை மண்டல அலுவலக உதவி மேலாளா் தனசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT