நாகப்பட்டினம்

கடலில் தவறி விழுந்த மீனவா் மாயம்

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே திங்கள்கிழமை அதிகாலை விசைப் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மாயமான மீனவரை தேடு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரைச் சோ்ந்தவா் கலைச்செல்வன். இவருக்குச் சொந்தமான விசைப் படகில் ஜன. 1-ஆம் தேதி டாடா நகரைச் சோ்ந்த அறிவு (40) உள்ளிட்ட 13 மீனவா்கள் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே இவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனராம். அப்போது, படகில் இருந்து அறிவு தவறி கடலில் விழுந்துள்ளாா். மற்ற மீனவா்கள் அவரை மீட்க முயன்றனா்.

எனினும், கடல் அலையில் சிக்கி அவா் மாயமானாா். அவரை தேடும் பணியை மீனவா்கள் தீவிரப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து நாகை கடலோரக் காவல் குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT