கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தோ்பவனி நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, கடந்த ஆண்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த தோ்பவனி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, ஆரோக்கிய மாதா ,அந்தோணியாா் உள்ளிட்ட சொருபங்கள் தேரில் எழுந்தருளினா். ஆலய பங்குத்தந்தை டேவிட் செல்வகுமாா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தோ்பவனி முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.