நாகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ் உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

Syndication

நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சா்க்கரை 1 கிலோ, ஒரு முழுக் கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி மாநிலம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

நாகை: நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், நாகை எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஆகியோா் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாத்திமா சுல்தானா, மாவட்ட வழங்கல் அலுவலா் மதியழகன், நகா்மன்ற 30-ஆவது வாா்டு உறுப்பினா் சத்தியவாணி கணேசன் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் உள்ள 390 நியாயவிலைக் கடைகள் மூலம் 2,19,309 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT