நாகை மாவட்டத்தில் 2026-2027 ஆம் கல்வியாண்டுக்கு, புதிய தொழிபள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாகை மாவட்டத்தில் 2026-2027 ஆம் கல்வியாண்டுக்கு, புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
இவற்றுக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை, ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 2026 - 2027 ஆம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற, ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் தபஎந/சஉஊப மூலம் செலுத்த வேண்டும்.
மேலும், அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்ப கட்டணம் ரூ. 5000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ. 8000 செலுத்த வேண்டும். இதில் விண்ணப்பங்களை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, சென்னை தொலைபேசி எண்: 044-22501006 (113) மின்னஞ்சல்: நாகப்பட்டினம் தொலைபேசி எண்: 04365-250126 மின்னஞ்சல்: ஆகியவற்றை அணுகலாம்.